துனீஸ்:ஜனநாயக புரட்சியின் மூலம் பதவி இழந்த முன்னாள் துனீசியா நாட்டு சர்வாதிகாரி ஸைனுல் ஆபிதீன் பின் அலிக்கு ராணுவ நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.கொலைச் செய்ய தூண்டியது உள்ளிட்ட குற்றங்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. ஆனால், பின் அலி சவூதியில் தஞ்சம் புகுந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மக்கள் புரட்சியை தொடர்ந்து சவூதி அரேபியாவுக்கு தப்பிச்சென்ற பின் அலிக்கு பல் வேறு
குற்றங்களுக்காக ஏற்கனவே நீதிமன்றம் 66 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியிருந்தது. தற்பொழுது ஜனநாயகப் போராட்டத்தின் போது 4 இளைஞர்கள் கொலைச் செய்யப்பட்ட சம்பவத்தில் பின் அலிக்கு 20 ஆண்டுகள் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இதே வழக்கில் பின் அலியின் ஆட்சியின் இதர பிரமுகர்களுக்கும் நீதிமன்றம் 5 முதல் 10 ஆண்டுகள் வரையிலான தண்டனையை தீர்ப்பளித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக