வியாழன், ஜூன் 14, 2012

இமாச்சலில் விசா முடிந்த எட்டு சீனர்கள் கைது: ரூ.30 லட்சம் மற்றும் 3 ஆயிரம் டாலர் சிக்கியது

இமாச்சலில் விசா முடிந்த எட்டு சீனர்கள் கைது: ரூ.30 லட்சம் மற்றும் 3 ஆயிரம் டாலர் சிக்கியதுஇமாச்சலபிரதேச மாநிலம், மன்டி மாவட்டத்தில் தங்கியுள்ள சீனர்கள் குறித்து, மத்திய நுண்ணறிவுப் பிரிவு போலீசார், உள்ளூர் போலீசாருக்கு சில ரகசிய தகவல்களை அனுப்பினர். இதையடுத்து அக்கிராமத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு விசா முடிந்தும், சீனாவுக்கு திரும்பாமல் தங்கியிருந்த எட்டு பேர் போலீசாரிடம் சிக்கினர்.  அங்கிருந்த மேலும் சிலர் போலீசாரைப் பார்த்ததும் தப்பியோடி விட்டனர்.
 
சீனர்கள் தங்கியிருந்த பகுதிகளில் போலீசார் நடத்திய சோதனையில், சீன நாட்டு சிம் கார்டுகள், சர்வதேச ஏ.டி.எம் கார்டுகள், இந்தியப் பணம் ரூ.30 லட்சம், 3 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. அவர்களில் சிலர் கட்டிடப் பணி செய்து வந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனினும் அவர்கள் தங்குவதற்கு இந்த குக்கிராமத்தை தேர்வு செய்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த சம்பவம் குறித்து, டில்லியில் உள்ள சீன தூதரக செய்தி தொடர்பாளர் கூறுகையில், "இந்த சம்பவம் எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறையிடம் விவரங்கள் கேட்டுள்ளோம்' என்றார்.
 
 'திபெத்திய பெண்கள் சிலருக்குப் பயிற்சி அளித்து, அவர்கள் மூலமாக எனக்கு விஷம் கொடுத்து, என்னைக் கொல்ல சீன ஏஜென்டுகள் முயற்சித்து வருகின்றனர்'  என திபெத்திய தலைவர் தலாய்லாமா சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த சீனர்கள் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக