வியாழன், ஜூன் 14, 2012

கஸல் நாயகன் மெஹ்தி ஹஸன் மரணம்

King Of Ghazal - Mehdi Hassanகராச்சி:கஸல் வித்தகர் மெஹ்தி ஹஸன் மரணமடைந்தார். அவருக்கு வயது 84 ஆகும். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவரது மரணம் நிகழ்ந்தது.நுரையீல் தொடர்பான நோயைத் தொடர்ந்து சில தினங்களாக அவர்  மருத்துவமனையில் சிகிட்சைப் பெற்று வந்தார்.‘Aaye kuchh abr kuchh sharaab aaye’; ‘PattaPatta, Boota Boota’; ‘Dil-E-Nadan Tujhe Hua Kya
Hai’ and ‘Dil KiBaat Labon Par Laakar’ போன்ற அவரது ஸ்வர மதுரத்தில் உருவான கஸல் பாடல்கள் ஏராளம்.
கஸல் இதிஹாசம் என சங்கீத உலகம் அவருக்கு புகழாரம் சூட்டுகிறது.
1927-ஆம் ஆண்டு ஜூலை 28-ஆம் தேதி இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் புராதன சங்கீத குடும்பத்தில் மெஹ்தி ஹஸன் பிறந்தார். பின்னர் இந்தியா-பாக். பிரிவினையைத் தொடர்ந்து தனது 20-வது வயதில் அவர் பாகிஸ்தானில் குடியேறினார்.
தந்தை உஸ்தாத் அஸீம் கானும், மாமனார் உஸ்தாத் இஸ்மாயீல் கானும் மெஹ்தி ஹஸனுக்கு கஸல் சங்கீதத்தை பயிற்றுவித்தவர்கள் ஆவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக