நியூ யார்க் : நியூயார்க்கில் உள்ள அனைத்து போக்குவரத்து அமைப்புகளிலும் பணியாற்றும் முஸ்லீம், சீக்கியர்களுக்கு தொப்பி, தலைப்பாகை அணிவதில் விதிக்கப்பட்ட தடையை நீக்கியுள்ளதாக அமெரிக்க நீதித்துறை அலுவலகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் நடத்தப்பட்ட இரட்டை கோபுர தாக்குதலை தொடர்ந்து நியூயார்க் மாகாணத்தில் பேருந்து, ரயில் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து நிறுவனங்களில் பணியாற்றும் அனைவரும் தலையில் தொப்பி, தலைப்பாகை, டர்பன், ஸ்கார்ப், ஹிஜாப் உள்ளிட்டவை அணியும் போது
அதில் போக்குவரத்து அலுவலகத்தின் சின்னம் பொறிக்கப்பட்டதை தான் அணிய வேண்டும் என்று கட்டுபாடு விதிக்கப்பட்டது.
மார்ச் 2002ல் அமுல்படுத்தப்பட்ட உத்தரவுக்கு சீக்கியர்களும் முஸ்லீம்களும் தங்களை தனிமைப்படுத்துவதாக கூறி எதிர்ப்பு தெரிவித்த போதிலும் சட்டத்தை வாபஸ் பெற மெட்ரோ போக்குவரத்து அமைப்பு மறுத்தது. 2004ல் இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் எதிரொலியாக 8 ஆண்டுகள் கழித்து முஸ்லீம்களும் சீக்கியர்களும் எவ்வித கட்டுபாடுகளும் இன்றி தலைப்பாகை, தொப்பி, ஸ்கார்ப் உள்ளிட்டவற்றை அணியலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த சீக்கிய கூட்டமைப்பின் தலைவர் அமர்தீப் சிங் இது வரை தங்கள் நம்பிக்கை அல்லது வேலை இரண்டில் ஒன்றை மட்டுமே மேற்கொள்ள வேண்டிய நிலையிலிருந்து சிறுபான்மையினரை காப்பாற்றிய தீர்ப்பை வரவேற்பதாகவும் இரட்டை கோபுர தாக்குதலுக்காக பழிவாங்கபட்ட அப்பாவி சீக்கிய மற்றும் முஸ்லீம் மக்களின் துயரம் முடிவுக்கு வந்ததற்காகவும் நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக