என் மீதான குற்றச்சாட்டுகளை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்று நித்தியானந்த தியான பீடத்தின் பீடாதிபதி நித்தியானந்தர் தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:நீதிமன்ற உத்தரவை மீறி, எனக்கு எதிரான ஆரத்தி ராவின் பேட்டியை தனியார் தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பியுள்ளது.என் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தின் விசாரணையில் இருப்பதால், அதைப்பற்றி நான் பேச முடியாது. ஆனால், என் மீது ஆரத்தி ராவ் பகிரங்கமாகக் கூறியுள்ள குற்றச்சாட்டுகளில் இருந்து என்னை தற்காத்துக் கொள்ள வேண்டியுள்ளது. அதற்காக சில விளக்கங்களை அளிக்க விரும்புகிறேன்.2005-ம் ஆண்டு முதல் 6 ஆண்டுகளில் சுமார் 40 முறை பாலியல் தொடர்பு வைத்திருந்ததாக ஆரத்தி ராவ் கூறியுள்ளார். இதுபற்றி 2010-ம் ஆண்டில் போலீஸில் புகார் அளித்துள்ளார். இப்போது இந்தப் பிரச்னையை ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.
மதுரை ஆதீனத்தின் 293-வது சந்நிதானமாக நியமிக்கப்பட்டுள்ள என் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தி, அந்தப் பொறுப்பில் இருந்து என்னை விலக்கவே, என் எதிரிகளுடன் இணைந்து ஆரத்தி ராவ் உள்ளிட்ட சிலர் எனக்கு எதிராகச் சதித் திட்டம் தீட்டியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக