
அலெப்போ மாகாணத்தில் ராணுவத்தினருக்கும், ஆயுதங்களுடன் வந்த கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பெரும் மோதல் நடந்தது. இந்த மோதலில் கிளர்ச்சியாளர்களின் படைக்கு பெரும் சேதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. மேலும் இந்தக் கலவரங்களால் பெரும்பாலான வீடுகள் அழிக்கப்பட்டதாகவும், எஞ்சியிருந்த வீடுகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டதாகவும் கிளர்ச்சிக்கு ஆதரவளிப்போர் கூறியுள்ளனர்.
சிரியாவில் கடந்த ஒருவாரமாக நடந்துவரும் கலவரத்தால் ராணுவத்தினர் 68 பேர், பொதுமக்கள் 29, கிளர்ச்சியாளர்கள் 23 பேர் என மொத்தம் 120 பேர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக