
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஜூலை 19-ந் தேதி நடைபெறும். நாட்டின் அனைத்து மாநில தலைநகரங்களிலும் வாக்குப் பதிவு நடைபெறும். இத்தேர்தலில் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் வாக்களிப்பர். குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவுகள் ஜூலை 22-ல் வெளியாகும்.
இத்தேர்தலை மாநிலங்களவையின் செயலர் தேர்தல் அதிகாரியாக பொறுப்பு வகித்து நடத்த உள்ளார் என்றார் அவர்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜி நிறுத்தப்படக் கூடும் எனத் தெரிகிறது. அதிமுக, பிஜூ ஜனதா தளம் சார்பில் சங்மா போட்டியிடுகிறார். குடியரசு துணைத் தலைவர் பதவியை தங்களது அணிக்கு விட்டுக் கொடுத்தால் காங்கிரஸ் வேட்பாளரை பாஜக அணி ஆதரிக்கக் கூடும் என்று தெரிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக