இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் வடக்கு வசீரிஸ்தானில் அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தாக்குதலில் 15 பேர் பலியானார்கள். ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கொலைச் செய்யப்பட்ட அனைவருமே அப்பாவி மக்கள் ஆவர்.கடந்த 3 தினங்களாக பாகிஸ்தானில் ஆப்கான் எல்லை பகுதிகளில் அமெரிக்கா நடத்தும் அடாவடி ஆளில்லா விமானத்தாக்குதலில் கொலைச் செய்யப்படும் மக்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. இதே பகுதியில் ஒரு
கிராமத்தில் அமெரிக்கா குண்டுவீசி 10 பேரை படுகொலைச் செய்தது.
போராளிகள் மீது தாக்குதல் என்று கூறி அமெரிக்கா அப்பாவி மக்களை கொன்று குவித்து வருகிறது.
ஆளில்லா விமானத்தாக்குதலுக்கு பாகிஸ்தானில் எதிர்ப்பு வலுத்து வருவதையும் பொருட்படுத்தாமல் அமெரிக்கா அப்பாவி மக்களை கொன்று குவிப்பது குறிப்பிடத்தக்கது. வஸீரிஸ்தானில் மனா ரஃப்ஸாயி கிராமத்தில் நேற்று நான்கு ஏவுகணைகளை ட்ரோன்கள்(ஆளில்லா விமானங்கள்) வீசின. இதனை பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார்.
கடுமையான எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் ட்ரோன் தாக்குதலை நடத்தி வரும் ஒபாமா அரசின் அட்டூழியத்திற்கு பாகிஸ்தானின் அரசியல் கட்சிகள் மத்தியில் கோபம் நிலவுவதாக அரசு வட்டாரங்களை மேற்கோள்காட்டி அல்ஜஸீரா கூறுகிறது.
கடந்த நவம்பர் மாதம் அமெரிக்கா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 24 பாகிஸ்தான் ராணுவத்தினர் கொலைச்செய்யப்பட்டனர். தாக்குதலைத் தொடர்ந்து இரு நாடுகள் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்தது. மேலும் ஆப்கானுக்கு பாகிஸ்தான் வழியாக நடைபெறும் நேட்டோ-அமெரிக்க சரக்கு போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக