சனி, மே 12, 2012

அபூ ஸலீம் வழக்கு:மோக்காவை ரத்துச்செய்ய நீதிமன்றம் அனுமதி!

புதுடெல்லி:மிரட்டி பணம் பறித்த வழக்கில் நிழலுக தாதா அபூ ஸலீம் மீது சுமத்தப்பட்ட மஹராஷ்ட்ரா அமைப்பு ரீதியான குற்றத் தடுப்பு சட்டத்தை வாபஸ் பெற டெல்ல் உயர்நீதிமன்றம் போலீசுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
நிபந்தனைகளை மீறியதைத் தொடர்ந்து போர்ச்சுகல் உச்சநீதிமன்றம் அபூ ஸலீமை இந்தியாவிடம் ஒப்படைத்த நடவடிக்கையை ரத்துச் செய்தது.
இச்சூழலில் அபூ ஸலீம் மீது விசாரணை நீதிமன்றம் சுமத்திய மோக்காவை ரத்துச்செய்ய டெல்லி போலீஸ் டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகியது.
2009-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28-ஆம் தேதி அபூ ஸலீம் மீது விசாரணை நீதிமன்றம் மோக்கா சட்டத்தை சுமத்தியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக