கோலாலம்பூர்:மலேசியாவில் தொலைக்காட்சி தமிழ் நெடுந்தொடர்களுக்கு(மெகா சீரியல்) தடைவிதிக்க பினாங்கு நுகர்வோர் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுத்தொடர்பாக அச்சங்கம், மலேசிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
செயற்கைக்கோள் தொலைக்காட்சிகளை மக்கள் தாமாக விரும்பி கட்டணம் செலுத்திப் பார்க்கிறார்கள் என்பதால், அத்தொடர்களுக்கு நேரடியாக அரசாங்கம் தடை விதிக்க முடியாது என்று மலேசிய அரசு அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் தங்களுக்குத் தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
நெடுந்தொடர்களை பார்த்துவரும் இளைஞர்களின் பழக்க வழக்கங்கள் மோசமடைவதாகவும், பெரியவர்களிடம் மரியாதைக் குறைவாக நடந்துகொள்ளுதல், வன்முறை பாதையில் செல்லுதல் போன்றவற்றுக்கு அவர்கள் ஆட்படுவதாகவும் சுப்பாராவ் கூறினார்.
தொடர்களில் மூழ்கிப்போகும் பெண்கள் சமையல், பிள்ளைகளைப் பராமரித்தல் போன்ற வீட்டுக் கடமைகளில் தவறுகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
தம்முடைய கோரிக்கையை மலேசிய அரசாங்கம் தொடர்ந்து நிராகரிக்குமானால் பெரிய எதிர்ப்பு பிரச்சாரத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் பினாங்கு நுகர்வோர் சங்கம் கூறுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக