செவ்வாய், ஜனவரி 01, 2013

பாலியல் குற்றத்திற்கு தூக்கு: ஜெயலலிதா ஆதரவு !

பாலியல் குற்றத்திற்கு தூக்கு தண்டனை மற்றும் வேதியியல் முறை ஆண்மை நீக்கம் ஆகியவற்றிற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆதரவு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாலியல் வன்முறைகள் தொடர்பாக மாநிலத்தில் பெண்களிடம் அச்ச உணர்வு ஏற்படாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கற்பழிப்பு வழக்குகள் பெண் உதவி ஆய்வாளர் மூலம் விசாரணை நடத்தப்படும். பாலியல் வன்முறைகளை தடுக்கும் விதமாக குண்டர் சட்டம் திருத்தப்படும். பாலியல் பலாத்காரத்திற்கு உட்படும் பெண்களின் மருத்துவ செலவுகளை அரசே ஏற்கும். மேலும், கற்பழிப்பு குற்றத்திற்கு தூக்கு தண்டனை மற்றும் வேதியியல் முறை ஆண்மை நீக்கம் ஆகியவற்றிற்கு அவர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக