அசாம் - அருணாச்சல பிரதேச எல்லை மாவட்டமான, தின் சுக்கியா மாவட்டத்தில் ஏராளமாக தேயிலை எஸ்டேட்கள் உள்ளன. இவற்றில், திப்ருகர் பகுதியில் உள்ள குனாபதார் தேயிலை எஸ்டேட்டில், கடந்த புதன்கிழமை தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் எஸ்டேட் முதலாளியின் வீடு, வாகனங்கள் ஆகியவற்றை தீயிட்டு கொளுத்தினார்கள். இந்த தீயில் சிக்கி, எஸ்டேட் முதலாளி மிருதுள்குமார் பட்டாச்சார்யா, அவரது மனைவி ரீட்டா ஆகியோர் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 14 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையின் பலனாக, பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து, அசாம் மாநில போலீஸ் ஐ.ஜி. நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
சம்பவத்தன்று, சுமார் 800 தொழிலாளர்கள் கூட்டமாக சென்று எஸ்டேட் அதிபர், மற்றும் அவரது மனைவியை வீட்டுக்குள் வைத்து பூட்டி, அவர்களை தீமூட்டி பொசுக்கிக் கொன்றுள்ளனர். இதிலும் வெறி தணியாத போராட்டக்காரர்களில் சிலர், கருகிக் கிடந்த எஸ்டேட் அதிபர், மற்றும் அவரது மனைவியின் பிரேதங்களை ஆவேசமாக பிய்த்து தின்றதாக, கைது செய்யப்பட்டுள்ளவர்களில் 2 பேர் சாட்சி அளித்துள்ளனர். இந்த சாட்சியின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக