செவ்வாய், டிசம்பர் 18, 2012

எகிப்து: மக்கள் விருப்ப வாக்கெடுப்பில் முதல் கட்டம் அரசுக்கு சாதகம் !

கெய்ரோ:எகிப்தில் அரசியல் சாசனத்தின் மீதான மக்கள் விருப்ப வாக்கெடுப்பின் முதல் கட்டத்தில் பெரும்பான்மையான மக்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். தலைநகர் உள்பட 10 மாகாணங்களில் நடந்த வாக்கெடுப்பில் 56.5 சதவீத மக்கள் ஷரீஅத் அடிப்படையிலான அரசியல் சாசனத்தை ஆதரித்தும், 43 சதவீதம் பேர் எதிர்த்தும் வாக்களித்துள்ளதாக இஃவானுல் முஸ்லிமீன்
வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இரண்டாவது கட்ட தேர்தல் 22-ஆம் தேதி நடைபெறும். அதன் பிறகே அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாகும். வாக்குப்பதிவுகள் நடந்த 6300-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் இஃவானுல் முஸ்லிமீனின் அரசியல் பிரிவான ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் கட்சியின் பிரதிநிதிகள் இருந்தனர். இவர்கள் அளித்த ரிப்போர்டின் அடிப்படையில் புள்ளிவிபரங்கள் வெளியிடப்பட்டன.
ஆனால், அதிகாரப்பூர்வ முடிவுகளை மட்டுமே அங்கீகரிக்க முடியும் என்று எதிர்கட்சியான நேசனல் சால்வேஷன் ஃப்ர்ண்ட் அறிவித்துள்ளது. அரசியல் சாசனத்தை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று நேசனல் சால்வேஷன் ஃப்ரண்ட் மக்களுக்கு கோரிக்கை விடுத்திருந்தது. சனிக்கிழமை நடந்த வாக்குப்பதிவு அமைதியாகவே நடைபெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக