திங்கள், டிசம்பர் 17, 2012

மக்கள் விருப்ப வாக்கெடுப்பு: எகிப்தில் தீவிர வாக்குப் பதிவு !

கெய்ரோ:எகிப்தில் புதிய அரசியல் சாசனம் தொடர்பான மக்கள் விருப்ப வாக்கெடுப்பின் போது தீவிரமான வாக்குப்பதிவு நடந்தது. காலை எட்டுமணிக்கு வாக்கெடுப்பு துவங்குவதற்கு 2 மணிநேரத்திற்கு முன்பே பெரும்பாலான வாக்குச் சாவடிகளில் மக்கள் திரண்டிருந்தனர். ஷரீஅத் அடிப்படையிலான அரசியல் சாசன சட்டத்தை புறக்கணிக்கவேண்டும் என்று சில அரசியல் கட்சிகள்
அழைப்பு விடுத்திருந்தன. ஆனால், மக்கள் அதனை புறக்கணித்துவிட்டு வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க ஆவலுடன் திரண்டிருந்தனர். கெய்ரோ, அலெக்ஸாண்ட்ரியா உள்ளிட்ட 10 மாகாணங்களில் நேற்று வாக்கெடுப்பு நடந்தது. அரசியல் சாசனத்தை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்று அதிபர் முஹம்மது முர்ஸியும், மார்க்க அறிஞர்களும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர். எதிர்கட்சியினரின் எதிர்ப்பை தொடர்ந்து 2 லட்சம் ராணுவ வீரர்கள் போலீஸ்காரர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.
மொத்தம் 5 கோடி வாக்காளர்கள் உள்ளனர். பாதிபேர் முதல் கட்ட தேர்தலில் வாக்களித்துள்ளனர். முதல் கட்ட வாக்கெடுப்பின் முடிவுகள் அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் 2-வது கட்ட தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. அடுத்த வருடம் துவக்கத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும். அதற்கு முன்பு அரசியல் சாசனம் அமலுக்கு வரவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக