கராச்சி:பாகிஸ்தானில் பெஷாவரில் பாச்சா கான் விமான நிலையத்தில் நடந்த ராக்கெட் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டது. பெஷாவர் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ரகசிய இடத்தில் இருந்து 5 ராக்கெட்டுகள் விமான நிலையம் மீது ஏவப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவத்தை தொடர்ந்து விமானநிலையத்திற்கு
செல்லும் சாலை மூடப்பட்டது. அப்பகுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் இருந்து அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. விமான நிலையத்தின் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்ட பாதுகாப்பு அதிகாரிகள் அப்பகுதியை சுற்றி வளைத்துள்ளனர். இங்கு பலத்த துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக