அல் ஹலீல்: கடந்த ஞாயிற்றுக்கிழமை (17/06/2012) அல் ஹலீல் பிராந்தியத்தின் துர்ரா நகருக்கு அருகே உள்ள பலஸ்தீனர்களுக்குச் சொந்தமான விளைநிலத்தை இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை புல்டோஸர் மூலம் நிர்மூலமாக்கியுள்ளது. ஹர்ஸா கிராமத்தில் உள்ள இரண்டு பலஸ்தீன் குடும்பத்தவர்களுக்குச் சொந்தமான மேற்படி விளைநிலம் பயிர்செய்கைக்குப் பின் அறுவடைக்குத் தயாரான நிலையிலேயே இந்த நாசகார வேலையை ஆக்கிரமிப்பு இராணுவம் செய்துள்ளது. தமக்கு ஏற்பட்டுள்ள பெரும் நட்டத்தினால், மேற்படி பலஸ்தீனக் குடும்பங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு
ஆளாகியுள்ளனர். இதேவேளை, பலஸ்தீனர்கள் செறிந்து வாழும் ஸலைமா குடியேற்றத்தைச் சுற்றிவளைத்துக் கொண்ட யூத ஆக்கிரமிப்பாளர் குழுவொன்று பலஸ்தீன் வீடுகள்மீது கடும் தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
பலஸ்தீன் மக்களின் வாழ்வாதாரத்தை நிர்மூலமாக்கி, அடாவடித் தாக்குதல்கள் மூலம் அச்சுறுத்தி அவர்கள் தத்தமது சொந்த இடங்களை விட்டு வெளியேறிச் செல்லும் வகையில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவமும், சட்டவிரோத யூத ஆக்கிரமிப்பாளர்களும் தொடர்ச்சியாக இத்தகைய நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக