
அண்மைக் காலமாக படித்த, நல்ல வேலையில் உள்ள முஸ்லிம் இளைஞர்கள் அநியாயமாக தீவிரவாத பட்டம் சூட்டி கைது செய்யப்படுவது வழக்கமாகிவிட்டது. அதில் ஒருவர் தாம் ஃபஸீஹ் மஹ்மூத்.
ஃபஸீஹின் கொள்ளு தாத்தா முஹம்மது பெரிய நிலச்சுவான் தாரராகவும், பர்ஸமேலா கிராமத்தில் மிகப்பெரிய பணக்காரராகவும் திகழ்ந்தவர். அவர் இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றவர். அவரது ஒரே மகன் ஃபஸீஹின் தாத்தாவான முஹம்மது மஹ்மூத் அஹ்மத். இவர் 1948-ஆம் ஆண்டு அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் இருந்து பி.ஏ பட்டம் படித்தவர். இவர் பட்டப்படிப்பை முடித்ததும் தனது தந்தையின் பெரும் சொத்துக்களை பரமாரிக்கும் பணியில் ஈடுபட்டார். அங்குள்ள பஞ்சாயத்தின் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். அவருக்கு 3 மகன்கள். அதில் ஒருவர் ஃபஸீஹின் தந்தையான ஃபிரோஸ் அஹ்மத் ஆவார். இவர் எம்.பி.பி.எஸ் பட்டம் முடித்த டாக்டர் ஆவார்.
ஃபஸீஹின் தந்தையின் சகோதரர்களில் ஒருவர் கல்லூரி பேராசிரியராகவும், இன்னொருவர் பொறியியல் முடித்து ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். ஃபஸீஹின் மூத்த சகோதரர் ஸபீஹ் மஹ்மூத் எம்.பி.ஏ மற்றும் தகவல் தொழில் நுட்பம் பயின்றவர். ஃபஸீஹ் கர்நாடகா மாநில பட்கலில் உள்ள அஞ்சுமன் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினியரிங் பட்டம் முடித்தவர்.
ஃபஸீஹின் தாயார் அம்ரா ஜமால் தர்பாங்காவில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றுகிறார். ஃபஸீஹின் தாயாருடைய சகோதரி ஒருவர் ஆசிரியையாக பாட்னா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றுகிறார். இன்னொருவர் அலிகர் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக