பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக தொடரப்பட்ட ஒரு வழக்கில் சாமியார் நித்தியானந்தா இன்று கைது செய்யப்பட்டார். கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள பிடதி ஆசிரமத்தில் செய்தியாளர்களைத் தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில் நித்தியானந்தா நேற்று நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தார். ஒருநாள் சிறைவாசத்துக்குப் பிறகு அவருக்கு இன்று நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் கொடுத்திருந்தது. இந்த நிலையில்
ஜாமீனில் வெளிவந்த நித்தியானந்தா இன்று மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தார் என்பது நித்தியானந்தா மீது தொடரப்பட்டுள்ள புதிய வழக்கு. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் நித்தியானந்தா முதலில் மாவட்ட ஆட்சியரிடம் விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட உள்ளதாகத் தெரிகிறது.
முதல்வர் மீது ரூ. 10 கேட்டு வழக்கு:
இந் நிலையில் இன்று ஜாமீனில் வெளியே வந்த நித்யானந்தா தம்மை கைது செய்ய உத்தரவிட்ட கர்நாடக முதல்வர் சதானந்தா கவுடாவுக்கு எதிராக ரூ.10 கோடி கேட்டு மான நஷ்ட வழக்குத் தொடர்ந்தார்.
இதையடுத்தே அவர் வெளியே வந்தவுடன் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
நித்தியானந்தா இந்த வழக்கில் ஜாமீனில் வந்தாலும் அனேகமாக அடுத்த வழக்கையும் போட்டு உள்ளே தள்ள கர்நாடக அரசு தயாராகவே இருக்கும் என்றே செய்திகள் தெரிவிக்கின்றன.
கர்நாடகத்துக்குள் நுழைய தடை?:
மேலும் கர்நாடகத்தில் சட்ட ஒழுங்கு சிக்கலை ஏற்படுத்தி வரும் நித்தியானந்தா, இனிமேல் கர்நாடகத்துக்குள் வரக் கூடாது என்று அரசு தடை விதிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக