வெள்ளி, ஜூன் 15, 2012

7 மாத கர்ப்பிணியை கட்டாய கருக்கலைப்பு செய்த சீன அரசு. உலக நாடுகள் கண்டனம் !

சீனாவில் தம்பதிகள் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது சட்டம்.2-வது குழந்தை பெறுவதாக இருந்தால் அதற்கு பெரிய அளவில் அபராதம் செலுத்த வேண்டும்.  ஷான்சி மாகாணத்தை சேர்ந்த பெங்ஜியாமி என்ற பெண்ணுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் அவர் 2-வதாக கர்ப்பமாக இருந்தார். எனவே அவர் அபராதம் செலுத்த வேண்டும் என்று அரசு நிர்வாகம் உத்தரவிட்டது. ஆனால் அவர் அபராதம் செலுத்தவில்லை.
 
இந்த நிலையில் அவர் 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். அபராதம் செலுத்தாததால் அவரை கட்டாயப்படுத்தி ஆஸ்பத்திரிக்கு இழுத்து சென்று கருக்கலைப்பு செய்தனர். இதனால் அவரது உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. அவரை ஆஸ்பத்திரிக்கு இழுத்து சென்றதையும், கருக்கலைப்பு செய்ததையும் படம் பிடித்து இணையதளத்தில் வெளியிட்டு உள்ளனர்.
 
இதைப் பார்த்தவர்கள் அனைவரும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் சீனா மீது கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக