புதன், ஜூன் 13, 2012

தலைமறைவாக இருந்த நித்தியானந்தா கர்நாடகா நீதிமன்றத்தில் சரண் !

ராம்நகர்:பாலியல் லீலா விநோதங்களுக்கு பெயர் பெற்ற நித்தியானந்தா இன்று(புதன்கிழமை) பெங்களூரை அடுத்துள்ள ராம்நகர் மாவட்ட மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்தார். அவரது மடத்தில் நிருபர்களுடன் ஏற்பட்ட மோதல் தொடர்பாகவும், பெண் சீடர் ஒருவர் அளித்த பாலியல் குற்றச்சாட்டின் பேரிலும் கர்நாடகா போலீசார் அவரை தேடி வந்தனர்.ராம்நகர் மாவட்டம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வருகிறார் நித்தியானந்தா. அவர் மீது அமெரிக்காவில்
வசித்து வரும் ஆர்த்தி ராவ் என்ற பெண் சீடர் கன்னட டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தன்னை மயக்கி பலமுறை நித்தியானந்தா உடலுறவு வைத்துக் கொண்டதாக குற்றம் சாட்டியிருந்தார். மேலும் பல பெண்களை அவர் சீரழித்து வருகிறார் என்றும், ஹிப்நாட்டிசம்(வசியப்படுத்துதல்) மூலம் பெண்களை அவர் அடிமையாக வைத்திருப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் பிடதி ஆசிரமத்தில் செய்தியாளர்கள் நித்தியானந்தாவை சந்தித்தபோது ஆர்த்தி ராவ் விவகாரம் வெடித்தது. நித்தியானந்தா ஆதரவாளர்களால் கன்னட சுவர்ணா டிவி செய்தியாளர் அஜீத் என்பவர் தாக்கப்பட்டதாக தெரிகிறது. அவருக்கு ஆதரவாக கன்னட நவநிர்மான் சேனே அமைப்பினர் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து இரு தரப்பினர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இரு தரப்பிலும் பலர் கைதானார்கள். நித்தியானந்தா தலைமறைவாகி விட்டார். அவரை ராம்நகர் போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். அவரது ஆசிரமும் தற்போது அரசின் கைகுக்குப் போய்விட்டது. அங்கு சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நித்யானந்தா மீதான வழக்கை ரத்து செய்யுமாறு நித்யானந்தா தரப்பில் கோரிக்கை மனு ஒன்று பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், வழக்கை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கையை மறுத்ததோடு, இம்மனு மீதான விசாரணையை நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து யாரும் எதிர் பாராதவகையில், நித்யானந்தா கர்நாடக மாநிலத்தில் உள்ள ராம் நகர் மாவட்ட நீதிமன்றத்தில் சரண்டைந்தார். அவரை ஒரு நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து நித்யானந்தா ராம் நகர் மாவட்ட சிறைக்கு அழைத்து செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக