செவ்வாய், ஜூன் 05, 2012

இந்தியாவிற்கு செல்வோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சீன வெளியுறவு அமைச்சகம் !

 பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் போரட்டங்கள் வெடிப்பதால், சீனாவிலிருந்து இந்தியாவிற்கு செல்வோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அந்நாட்டு மக்களுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவின் வர்த்தகர்கள் சிலர் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்ட விவகாரத்தில், சீனா செல்ல இந்தியர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கைக்கு பழிக்குப்பழி நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.

மேலும், சீன வெளியுறவு அமைச்சக இணையதளத்தில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில், இந்தியாவில் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள், வேலை நிறுத்தங்கள் நடைபெற்று வருகின்றன. போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் சீனர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீனாவில் நடைபெற உள்ள சாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கலந்து கொள்ள இருக்கும் நிலையில் சீனா இந்த அறிக்கையை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக