பாட்னா:பீகாரில் உயர்ஜாதி ஹிந்து தீவிரவாத அமைப்பான ரன்வீர் சேனாவைச் சார்ந்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை அழைப்பு விடுத்த முழு அடைப்புப் போராட்டம் வன்முறை களமாக மாறியது.ரன்வீர் சேனாவின் தலைவர் பிரம்மேஸ்வர் சிங் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள் ஒருநாள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தனர்
. மாவட்டத்தின் கிராமப் பகுதிகளிலும் முழு அடைப்பு நடைபெற்றது. இங்கு பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
பிரம்மேஸ்வர் சிங்கின் ஆதரவாளர்கள் அதிகாலையிலேயே தேசிய நெடுஞ்சாலைகளில் டயர்களை எரித்து சாலைகளில் வாகனங்களைச் செல்லவிடாமல் தடுத்தனர். இது தொடர்பாக 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பல இடங்களில் வாகனங்கள் மீது கல்வீச்சிலும் அவர்கள் ஈடுபட்டனர். தண்டவாளங்களில் பாறைகளை வைத்து ரயில் போக்குவரத்தையும் சில மணி நேரத்துக்கு ஸ்தம்பிக்கச் செய்தனர். திறக்கப்பட்டிருந்த ஒருசில கடைகள் மீது கற்களை வீசித் தாக்கி, அவற்றை மூடச் செய்தனர். கடையைத் திறந்து வைத்திருந்த டீக்கடைக்காரர் ஒருவரை சாலையில் போட்டு அடித்து உதைத்தனர். அர்வால் மாவட்டத்தில் கல்வீச்சில் ஈடுபட்ட கும்பலுக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக