செவ்வாய், ஜூன் 05, 2012

10-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு – 83.4% மாணவர்கள் தேர்ச்சி – தஞ்சை மாணவர் முதலிடம்

பி.ஆர்.பப்ளிக் பள்ளி மாணவர் ஸ்ரீநாத் 500 க்கு 497 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றார்சென்னை:பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்  இன்று வெளியிடப்பட்டது. இந்த வருடம் 83.4%(மொத்தம்) மாணவ-மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இத்தேர்வில் தஞ்சாவூரை சேர்ந்த மாணவர் முதலிடம் பெற்றார்.தஞ்சாவூரை சேர்ந்த பி.ஆர்.பப்ளிக் பள்ளி மாணவர் ஸ்ரீநாத் 500 க்கு 497 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றார்.496 மதிப்பெண்கள் பெற்று 6 பேர்
இரண்டாம் இடம் பெற்றுள்ளனர். இதில் நாகர்கோவில் பள்ளியின் ஜென்கின்காட்பிரே, நெல்லை மாணவி நந்னி, ஈரோடு வித்யா பளளி மாணவி ஸ்வாதி ,கரூர் மெட்ரிக் பள்ளி மாணவர் கவின், செங்கல்பட்டு மாணவி அகிலா , நெல்லை மாணவி மகாலட்சுமி ஆகியோர் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்தவர்கள் ஆவர்.
495 மதிப்பெண்கள் எடுத்து 11 பேர் மூன்றாம் இடம் பெற்றுள்ளனர். இதில் ஸ்மிதா(நெல்லை), சூர்யா(சிவகாசி), அபி‌ஷேக்(சிவகாசி), தரணி(பொள்ளாச்சி), வி்ண்மிதா(ஈரோடு), ஷர்மிளா(ஈரோடு), ஜஸ்டின் சேவியர்(பொன்னேரி), ராஜேஸ்வரி(காஞ்சிபுரம்),  அம்ரிதா (திருப்பத்தூர்), ஸ்ரீதரா(நாமக்கல்), பூஜாஸ்ரீ(புரசைவாக்கம்) ஆகியோர் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்தவர்கள் ஆவர்.
கணிதம்: 1141 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.(கடந்த ஆண்டு 12,532)
அறிவியல்: 9237 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.(கடந்த ஆண்டு 3677)
சமூக அறிவியல்: 5,305  பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.(கடந்த ஆண்டு 256)
ஆங்கிலம்: 3 பேர்  நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்
சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ், முதன் முறையாக நடத்தப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.
மதிப்பெண் சான்றிதழ்கள் 21-ம் தேதி அன்று அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள்  மூலம் வழங்கப்படும். தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் இருந்து  சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக