
இந்த விபத்தில் கென்யாவின் உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் சைட்டோடி, துணை அமைச்சர் ஓர்வா ஓஜோடே, அதிகாரிகள் உள்பட ஆறு பேரும் இறந்து விட்டனர்.
இது குறித்து கென்யாவின் துணை அதிபர் கலோன்சோ முஸ்யோகா கூறுகையில் மரியாதைக்குரிய அமைச்சர் சைட்டோடியையும், துணை அமைச்சர் ஓர்வாவையும் நாம் இழந்து விட்டது துரதிஷ்டவசமானது என்றார்.
இந்த விபத்தில், அந்த ஹெலிகாப்டர் உருக்குலைந்து போனதாகவும், அதன் இடிபாடுகளில் இருந்து அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகிப் போயிருந்த 6 உடல்கள் மீட்கப்பட்டதாகவும் செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக