
மதுரா மாவட்டத்தின் தலைநகரில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோஸிகாலான் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை காலையில் நடந்த ஒரு சிறிய சாதாரணப் பிரச்சனை கலவரத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. இப்பிரச்சனை பேசித் தீர்க்கப்பட்டது. ஆனால், பின்னர் ஹிந்து சமூகத்த்தைச் சார்ந்த ஒரு கும்பல் ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு முஸ்லிம்களை தேடிப்பிடித்து தாக்கியது.
இதுக்குறித்து அங்கு துயர்துடைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஷம்ஸீர் கூறியது:
வெள்ளிக்கிழமை காலையில் வழக்கமாக சர்பத்(குளிர்பானம்)வழங்குவது வழக்கம். அன்றைய தினம் சர்பத் வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தில் ஒருவர் கையை நுழைத்து கழுகினார். இதனைத் தொடர்ந்து அந்த இளைஞர் தாக்கப்பட்டார். இதனால் இரு பிரிவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இப்பிரச்சனையை அனுபவம் வாய்ந்த முதிர்ந்தவர்கள் பேசி தீர்த்துவிட்டனர். ஆனால், அருகில் உள்ள கிராமங்களைச் சார்ந்த நூற்றுக்கணக்கான ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் (ஹிந்து சமூகத்தின் ஜாட் இனத்தவர்கள்)ஜும்ஆ தொழுகை முடிந்து கோஸிகாலான் மஸ்ஜிதில் இருந்து வெளியே வந்த முஸ்லிம்கள் மீது சரமாரியாக தாக்கினார்கள். தாக்குதல் நடத்தியவர்களை தடுப்பதற்காக எதிர்தரப்பினர் கல்வீசினர்.
தொடர்ந்து கலவரம் தீவிரமடைந்தது. தீவைப்பு சம்பவங்கள் அரங்கேறின. வன்முறையாளர்கள் முஸ்லிம்களை உயிரோடு தீவைத்துக் கொளுத்தினர். சனிக்கிழமை மாலை வரை கோஸிகாலானில் இருந்து இறந்த உடல்கள் போஸ்மார்ட்டத்திற்கு மதுரா மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. ஸலாஹுத்தீன், காலிக், ஃபக்ரு ஆகிய உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று ஷம்ஸீர் கூறினார்.
மரணித்தவர்களில் இருவர் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள்.
வன்முறையாளர்கள் 50க்கும் மேற்பட்ட கடைகளை தீ வைத்துக் கொளுத்தினர். 20 க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. பஞ்சாப் நேசனல் வங்கியின் கோஸிகாலான் கிளை தீவைத்துக் கொளுத்தப்பட்டது அதேவேளையில் 2 பேர் கொல்லப்பட்டதாகவும், கூடுதல் மரணங்கள் குறித்து அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகவில்லை என்றும் மாவட்ட மாஜிஸ்ட்ரேட் சஞ்சய்குமார் கூறுகிறார்.
கலவரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், ஊரடங்கு உத்தரவு தொடர்கிறது. அமைதியான சூழல் நீடித்தால் ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெறப்படும் என சஞ்சய் குமார் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக