
சீனாவின் பிரபல நடிகை ஷாங் சியி,33. இவர், "க்ரோச்சிங் டைகர்', "ஹிட்டன் டிராகன்' உள்ளிட்ட ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் போ ஜிலாய், சு மிங் உள்ளிட்டவர்களுடன், 10 ஆண்டுகளாக படுக்கையை பகிர்ந்து
கொண்டதன் மூலம், 600 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதித்துள்ளதாக, சீனாவின் "ஆப்பிள்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதை தொடர்ந்து, இந்த பத்திரிகையின் வாராந்திர இதழிலும், ஷாங் சியியை பற்றி செய்தி வெளியானது. இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டதால், சீன பொலீட்பீரோ உறுப்பினர் பதவியிலிருந்து போ ஜிலாய், கடந்த மார்ச் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்த செய்தியை மறுத்துள்ள ஷாங் சியி, தன்னை செக்ஸ் தொழிலாளியாக சித்தரித்து செய்தி வெளியிட்ட "ஆப்பிள்' பத்திரிகை நிறுவனத்தின் மீது, ஹாங்காங் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். நடிகை ஷாங் சியி, செல்வந்தர்கள் பலருடன் தொடர்பு வைத்துள்ளது குறித்து, சீன அரசு விசாரணை நடத்தி வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக