
இந்த மசோதாவை ராஜ்யசபாவில் அறிமுகப்படுத்தியபோது அதற்கு சமாஜ்வாடி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அதை நிறைவேற்ற முடியவில்லை. இதனால் ராஜ்யசபாவில் தினமும் கூச்சல், குழப்பமுமாக இருப்பதால் இந்த வாரம் முழுவதும் அவை முடங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று ராஜ்யசபாவில் அன்சாரியைத் தாக்கி பேசிய மாயாவதி கூறுகையில், நான் எதையும் கவனிக்கத் தயாராக இல்லை. கடந்த சில நாட்களாக நண்பகல் 12 மணிக்கு மேல் அவையை நடத்தவிடுவதில்லை. அவையை ஒழுங்காக நடத்துவது உங்கள் கடமை. நண்பகல் 12 மணிக்கு மேல் உங்களை இங்கே பார்க்கவே முடியவில்லை. என்ன மாதிரி ஒரு அவை இது. அவை ஒழுங்காக நடக்க நீங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அதன் பிறகு மாயாவதி கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் அவை நேற்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று தான் மோசமாக நடந்து கொண்டதற்காக அன்சாரியிடம் இன்று மாயாவதி மன்னிப்பு கேட்டார். அன்சாரி மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. தாழ்த்தப்பட்ட மக்கள் பயனைடயும் இந்த மசோதாவை அவர் கொண்டு வருவார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் மாயாவதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக