கிழக்கு சீன கடலில் உள்ள டயாவூ தீவு, இயற்கை எரிவாயு வளம் மிக்கது. இந்த தீவுக்கு சீனாவும், ஜப்பானும் உரிமை கொண்டாடி வருகின்றன. இதனால் இரு நாடுகளும் இதனை அரசியல் பிரச்சனையாக கையில் எடுத்துள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜப்பான் இத்தீவை விலைக்கு வாங்கியதாக அறிவித்தது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், தங்கள் நாட்டு ரோந்து கப்பல்களையும் அனுப்பி வைத்தது. தற்போதும் அப்பகுதியில் கண்காணிப்பு கப்பல்களை சீனா
நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில் இத்தீவின் அருகே சீனாவின் போர் விமானம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கும் ஜப்பான், போட்டியாக எப்.15 ரக போர் விமானங்களை அப்பகுதிக்கு அனுப்பி வைத்திருக்கிறது.
இதனால் கிழக்கு சீனக் கடற்பரப்பில் யுத்தம் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக