திங்கள், டிசம்பர் 10, 2012

ஹமாஸ் இயக்க தலைவரை சுட்டுக் கொல்லுங்கள்: இஸ்ரேல் எதிர்க்கட்சி தலைவன் வலியுறுத்தல் !

 காஸாவுக்கு வருகை புரிந்துள்ள ஹமாஸ் இயக்கத்தின் தலைவரை சுட்டுக் கொல்லுங்கள் என இஸ்ரேலின் எதிர்க்கட்சி தலைவர் சௌல் மொஃபாஷ் தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் கலீத், 45 ஆண்டுகளுக்கு பிறகு தாயகம் திரும்பி உள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கலீத்தை படுகொலை செய்ய வேண்டும் என இஸ்ரேல் அரசை எதிர்க்கட்சியான கதீம் வலியுத்தி வருகிறது. இதற்கு முன்பு ஜோர்டானில் இஸ்ரேலின் உளவுப் பிரிவான மொசாத்தின் ஏஜெண்டுகள் கனேடிய சுற்றுலா பயணிகளை போல் சென்று கலீத்தின் உடலில் விஷம் நிறைந்த ஊசியைப் போட்டுக் கொல்ல முயற்சித்தனர்.

ஆனால் இதில் கோமோ நிலைக்கு போய் உயிர்தப்பினார் கலீத் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது அந்நாட்டு அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் பகிரங்கமாகவே கலீத்தை படுகொலை செய்யத் தூண்டிவிடுவது காசா பகுதியில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக