வெள்ளி, டிசம்பர் 07, 2012

கெஜ்ரிவால் கட்சிக்கு வாக்களிக்க மாட்டேன் – ஹஸாரேயின் தொடரும் பல்டி !

புதுடெல்லி:அதிகார ஆசை பிடித்துள்ள கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்க மாட்டேன் என்று அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆஜ் தக் தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்த 2 நாள் நிகழ்ச்சியான அஜண்டாவில் ஹஸாரே வியாழக்கிழமை கூறியது: கெஜ்ரிவாலுக்கு அதிகாரத்துக்கு வர
வேண்டும் என்ற பேராசை உள்ளது. முதலில் தன்னலமற்ற சேவையில் ஈடுபடுகிறார் என்றுதான் நினைத்தேன். அவரின் மனதில் அரசியல் ஆசை எப்படி வந்தது என்று புரியவில்லை. அவரின் ஆம் ஆத்மி கட்சியும் மற்ற கட்சிகளைப் போலவே செயல்படுகிறது.
அதிகாரத்தின் மூலம் பணம்; பணத்தின் மூலம் அதிகாரம் என்ற வழியில்தான் அவர்களும் செல்கின்றனர். அவரின் கட்சிக்கு வாக்களிக்க மாட்டேன். ஊழலுக்கு எதிரான புரட்சி இன்னும் முடிந்து விடவில்லை. நாம் ஒற்றுமையாக நின்று போராட வேண்டும். ஆனால், கெஜ்ரிவால் தன் பாதையில் இருந்து தடுமாறி விட்டார். ராம்தேவுக்கும் சில மத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளது.
குஜராத்தில் ஏராளமான ஊழல் நடைபெற்றுள்ளது. அங்கு லோக் ஆயுக்தவை மோடி ஏன் கொண்டு வரவில்லை என்றார் அன்னா ஹஸாரே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக