வெள்ளி, டிசம்பர் 07, 2012

ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்து கர்நாடக காங். தலைவர் சித்தராமையா குசும்பு பேச்சு !

பெல்காம்: காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கும் வகையில் கர்நாடகா சட்டப்பேரவையில் காங்கிரஸ் தலைவர் சித்தராமையா பேசிய பேச்சால் பரபரப்பு ஏற்பட்டது. பெல்காமில் நடைபெற்ற கர்நாடகா சட்டசபை கூட்டத்தின் போது காவிரி நீர் பிரச்சனை குறித்து
விவாதிக்கப்பட்டது. இந்த விவாதத்தின் போது சித்தராமையா பேசுகையில், ஜெயலலிதா எப்பொழுதெல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வருகிறாரோ அப்போதெல்லாம் நமக்கு பிரச்சனைதான். கடந்த 2 ஆண்டுகளாக நாம் வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். தமிழகத்தில் கருணாநிதியைப் பொறுத்தவரையில் ஒருவகையில் பரவாயில்லை.
ஜெயலலிதா மிகவும் பிடிவாதமாக இருக்கிறார். நான் நினைக்கிறேன்.. அனேகமாக அவருக்கு திருமணமாகாததுதான் காரணமாக இருக்கலாம்.." என்று கூறியிருக்கிறார்.
இதேபோல் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் புட்டராஜூ பேசுகையில், கர்நாடகாவின் மண்டியா மாவட்டத்தில் மேல்கோட்டேவில் பிறந்தவர்தான் ஜெயலலிதா. ஆனால் அந்த நகரைவிட்டு வெளியேறிய பிறகு ஒருமுறை கூட அங்கு சென்று நிலைமைகளை அவர் பார்வையிடவே இல்லை என்றார்.
கர்நாடக காங்கிரஸ் தலைவர் சித்தராமையாவின் குசும்புத்தனமான பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக