சிரியாவில் அரச படைகள் இரசாயன ஆயுதங்களுடன் தயாராக உள்ளதாகவும், எந்நேரத்திலும் புரட்சி படையினரை தாக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இரசாயன ஆயுதங்களுடன் தயாராகவுள்ள அரச படையினர், ஜனாதிபதி அசாத் உத்தரவுக்காக காத்திருப்பதாகவும், சாரின் என்ற நச்சு(sarin gas) அடங்கிய குண்டுகளை எந்நேரமும் வீசலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ்வகையான குண்டுகள் தயார் நிலையில் இல்லை என தெரிவித்துள்ள அமெரிக்க அதிகாரிகள், அசாத் கட்டளை பிறப்பித்தால் உலகநாடுகளால் எதையுமே செய்ய முடியாமல் போகும் எனவும் எச்சரித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக