சீனாவில் சுற்றுலாவை மேம்படுத்த அரசு புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.
அதன்படி, தலைநகர் பீஜிங்கில் மட்டும் 72 மணி நேரம் தங்குவதற்கு விசா தேவையில்லை.
விசா இல்லாமல் பீஜிங்கை வெளிநாட்டினர் சுற்றிப் பார்க்கலாம். இந்த சிறப்பு அனுமதி 45 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் பெரும்பாலும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளே இடம்பெற்றுள்ளன. இத்திட்டத்தின்படி வேறு நாட்டு விசா வைத்திருப்பவர்கள், பீஜிங் வழியாக செல்லலாம்.
அவர்கள் வழியில் பீஜிங்கில் 72 மணி நேரம் தங்கலாம். இதற்கு டிரான்சிட் (அடுத்து செல்ல வேண்டிய நாட்டுக்கான டிக்கெட்டை காண்பித்தல்) அனுமதிக்கு மட்டும் விண்ணப்பம் தரவேண்டும். மற்றபடி விசா தேவையில்லை.
ஆனால், பீஜிங் வரும் சுற்றுலா பயணிகள் வேறு எந்த நகரத்துக்கும் செல்ல கூடாது. 72 மணி நேரத்துக்குள் பீஜிங்கை விட்டு வெளியேறிவிட வேண்டும்.
இந்த திட்டம் ஜனவரி 1ம் திகதி முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி 2013ம் ஆண்டு 6 லட்சம் முதல் 8 லட்சம் வரை சுற்றுலா பயணிகள் பீஜிங் வருவார்கள் என்று அரசு எதிர்பார்க்கிறது.
ஆனால், இந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும், இலங்கையும் இடம்பெறவில்லை.
இதேபோல் பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர் ஆகிய நாட்டினருக்கும் விசா இல்லாமல் தங்குவதற்கு அனுமதி இல்லை. இந்த நாடுகள் அனைத்துமே சீனாவின் அண்டை நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக