தென் ஆப்ரிக்கா நாட்டில் ப்ரிடோரியாவிலிருந்து ததா நோக்கி 11 ராணுவ வீரர்களுடன் விமானம் ஒன்று புறப்பட்டது. கிழக்குப்பகுதியில் உள்ள மலைப்பகுதி வெளியாக சென்ற அந்த விமானம் காலநிலை மோசமாக இருந்ததால் விபத்துக்குள்ளானது. லேடிஸ்மித் அருகே ட்ராகென்ஸ்பெர்க் மலைப்பகுதியில் இந்த விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆனால், இதில் பயணித்த ராணுவ வீரர்களின் நிலை என்ன என்ற விவரம் தெரியவரவில்லை. நெல்சன் மண்டேலாவை கவனித்து வரும் மருத்துவக்குழுவும் இந்த விமானத்தில் சென்றதாக சொல்லப்படும் செய்தியை ராணுவம் மறுத்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக