வெள்ளி, டிசம்பர் 07, 2012

காவிரி நீர் பெற்றுத் தந்த கருணாநிதி: விஜயகாந்த் புகழாரம் !

ஊட்டி: தமிழகத்துக்குரிய காவிரி நீரை முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகியோர் பெற்றுத்தந்தனர்.. ஆனால் தற்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் பெற்றுத்தர முடியவில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். அண்மைக்காலமாக திமுக- தேமுதிக இடையே 'இயற்கையான' கூட்டணி உருவாகிக் கொண்டிருக்கிறது. தேமுதிக
எம்.எல்.ஏ பார்த்திபன் கைது செய்யப்பட்ட போது, பிணவறையிலா பேச்சு சுதந்திரம் என்று கேள்வி எழுப்பி அறிக்கைவிட்டிருந்தார் திமுக தலைவர் கருணாநிதி. தற்போது காவிரி நீர் விவகாரத்தில் கருணாநிதியை புகழ்ந்திருக்கிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்
ஊட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,காவிரி பிரச்னையில் இரு மாநில அரசுகளும் அரசியல் செய்கின்றன. எம்.ஜி.ஆர்., கருணாநிதிஅகியோர் கர்நாடகத்திடம் பேசி தமிழகத்துக்கு தண்ணீர் பெற்றுத் தந்தனர். இப்போது ஜெயலலிதாவால் வாங்கித்தர இயலவில்லை. நதிகளை ராணுவத்திடம் ஒப்படைத்தால் மட்டுமே நதிநீர் பிரச்னைக்கு தீர்வு காண முடியும். கூடங்குளம் விவகாரம், இலங்கைத் தமிழர் பிரச்னை, கச்சத்தீவு உள்ளிட்ட அனைத்துப் பிரச்னைகளிலும் இரட்டை வேடம் போடுகின்றனர். இதுவரை என் மீது பத்து மாவட்டங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 32 மாவட்டங்களிலும் வழக்கு போட்டாலும் சந்திக்க தயார் என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக