வெள்ளி, டிசம்பர் 07, 2012

கூடங்குளம் அணு உலைக்கு இடைக்கால தடை இல்லை- உச்சநீதிமன்றம் தீர்ப்பு !

டெல்லி: கூடங்குளம் அணு உலைக்கு எதிரான வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு
தொடர்ந்தது. ஆனால் அணு உலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் எங்கே கொட்டப்படும் என்று தெரிவிக்கப்படாததால் அணு உலை இயங்க தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது ஆனால் மனுவை விசாரித்த நீதிபதிகள் இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டனர். மேலும் அணுக்கழிவுகளை எங்கே கொட்டுவது என்பது தொடர்பாக 10 நாட்களுக்குள் மத்திய அரசு பதில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக