ஞாயிறு, டிசம்பர் 16, 2012

பணத்திற்காக நரேந்திர மோடியின் முன்னால் மண்டியிடும் குஜராத் ஊடகங்கள் !

அஹ்மதாபாத்:நரேந்திரமோடியின் முன்னால் குஜராத் ஊடகங்கள் மண்டியிடுகின்றன. வாரி வழங்கும் உதவிகளுக்காக மோடிக்கு துதி பாடி குஜராத் ஊடகங்கள் பிரதி உபகாரம் செய்கின்றன. திவ்ய பாஸ்கர், சந்தேஷ், குஜராத் சமாச்சார், குஜராத் கார்டியன், அகிலா உள்ளிட்ட பத்திரிகைகள் அனைத்தும் மோடியின் கைக்குள்ளே உள்ளன. மோடி மனதில் காண்பதை இவர்கள் செய்தியாக
வெளியிடுவார்கள். கார்ப்பரேட்டுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் தேசிய ஊடகங்களோ மோடியை வளர்ச்சி நாயகனாக புகழாரம் சூட்டுகின்றன. மோடிக்கு எதிராக எழும் குற்றச்சாட்டுக்களையும், விவசாயிகளின் போராட்டங்களையும் இப்பத்திரிகைகள் புறக்கணிக்கின்றன. குஜராத்தில் தொழிற்சாலைகள் எழுப்பும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளையும், விவசாய நிலங்களில் இருந்து விவசாயிகள் விரட்டியடிக்கப்படுவதும் இவர்களைப் பொறுத்தவரை ஒரு செய்தியே அல்ல.
முஸ்லிம்களுக்கும், தலித்-பழங்குடியினருக்கும் இப்பத்திரிகைகளில் இடமே இல்லை. இவர்களின் பிரச்சனைகளுக்கு தேசிய பத்திரிகைகள் கூட முக்கியத்துவம் அளிப்பதில்லை. குஜராத்தில் நடைபெற்ற இந்திய வரலாறு காணாத இனப்படுகொலையின் போது குஜராத் பத்திரிகைகள் ஹிந்துத்துவா தீவிரவாதிகளை ஆதரித்தன. தேசிய பத்திரிகைகளில் இந்தியன் எக்ஸ்பிரசும், குஜராத் மொழியில் முஸ்லிம் நிர்வாகத்தின் கீழ் வெளியாகும் குஜராத் டுடே என்ற பத்திரிகையும் மட்டுமே மோடியை விமர்சிக்கின்றன.
கோத்ராவில் வெளியாகும் குஜராத்தி மொழியிலான ஜெய்ஹிந்த் எக்ஸ்பிரஸ் பத்திரிகை மோடியை கடுமையாக எதிர்த்தாலும் இப்பத்திரிகை 40 ஆயிரம் பிரதிகள் மட்டுமே வெளியிடுகிறது. தொலைக்காட்சி சானல்களில் முழுநேரம் மோடி துதி பாடி முன்னணி வகிப்பது நமோ குஜராத் ஆகும். இந்த சானலுக்கு மோடி சானல் என பெயரும் உண்டு. இதர உள்ளூர் சானல்களும் மோடி துதி பாடுவதில் போட்டியிடுகின்றன. தனது துதி பாடும் ஊடகங்களுக்கு உதவிகளை வாரியிறைக்கிறார் மோடி.
கோடிக்கணக்கான ரூபாய் ஒப்பந்தத்தில் விளம்பரங்கள், செய்தியாளர்களுக்கு கார், ப்ளாட் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. ஏதேனும் விமர்சனங்களை ஏதாவது ஊடகங்கள் எழுப்பினால் பணத்தால் அவர்களின் வாயை மூடுவார். பணத்தில் வீழாதவர்களை விளம்பரங்களை வழங்காமலும், மிரட்டியும் தனது வழிக்கு கொண்டுவர முயல்வார். மோடியின் இத்தகைய ஊடக கொள்கைதான் வைப்ரண்ட் குஜராத்(வளர்ச்சியடைந்த குஜராத்) என்ற மோசடி வெளியுலகிற்கு தெரியாமல் மூடி மறைக்கப்படுகிறது.
சில ஊடகங்கள் உண்மையை வெளிக்கொணரும் பொழுது சத்பாவனா சத்தியாகிரகம், விவேகானந்தா வேலைவாய்ப்பு திட்டம் என மக்களை ஏமாற்றும் திட்டங்களுடன் ஊடகங்களின் ஆதரவுடன் மோடி தனது முகத்தை மினுக்குவார். ஆனால், இம்முறை சில குஜராத்தி ஊடகங்கள் பகிரங்கமாக மோடியை ஆதரிக்கவில்லை. குஜராத் சமாச்சார் உள்ளிட்ட ஊடகங்கள் மோடிக்கு எதிரான செய்திகளையும் வெளியிடுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக