திங்கள், டிசம்பர் 10, 2012

பிலிப்பைன்ஸ் மக்களை கையேந்தும் நிலைக்கு கொண்டு சென்ற போபா புயலின் கோரத் தாண்டவம் ! (படங்கள் இணைப்பு)

பிலிப்பைன்சின் தென் பகுதியை புரட்டி போட்ட போபா புயலுக்கு இதுவரையிலும் 600க்கும் மேற்பட்டோர் உயரிழந்துள்ளனர்.இந்நிலையில் தெற்கு பகுதியில் உள்ள மின்டோனவோ தீவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து, வீதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டில்
அடுத்தடுத்து ஏற்பட்ட புயல் மற்றும் நிலநடுக்கத்தால் அங்குள்ள மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். வீடுகளை இழந்துள்ள மக்கள் உணவுக்காக மற்றவர்களிடம் கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
"எங்கள் மீது கருணை காட்டுங்கள், தயவுசெய்து தானம் அளியுங்கள்" என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தியபடி பிச்சை எடுக்கின்றனர்.

இதற்கிடையே நிவாரண பணிகளுக்காக சர்வதேச நாடுகளின் உதவியை பிலிப்பைன்ஸ் அரசு கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக