திங்கள், டிசம்பர் 10, 2012

பீஜிங்கை தொடர்ந்து விசா இல்லாமல் ஷாங்காயிலும் தங்கலாம்: சீனாவின் அதிரடி முடிவு !

சீனத்தலைநகர் பீஜிங்கை தொடர்ந்து, நாட்டின் மிகப்பெரிய நகரான ஷாங்காயிலும் விசா இல்லாமல் தங்க அனுமதி அளிக்கப்பட உள்ளது. சுற்றுலாவை மேம்படுத்தும் பொருட்டு சமீபத்தில் தலைநகர் பீஜிங்கில் விசா இல்லாமல் 72 மணி நேரம் தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதன் படி, வெளிநாட்டவர்கள் விசா இல்லாமல் பீஜிங்கை சுற்றி பார்க்கலாம். இந்த சிறப்பு அனுமதி 45 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இத்திட்டத்தின்படி பீஜிங்
வழியாக வேறு நாட்டுக்கு செல்பவர்களும், 72 மணி நேரம் தங்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இத்திட்டத்தை, மிகப்பெரிய நகரான ஷாங்காயக்கும் விரிவுபடுத்த சீனா முடிவு செய்துள்ளது.
மேலும் இந்த திட்டம் ஜனவரி 1ம் திகதி முதல் அமலுக்கு வருகிறது.
இதன்படி 2013ம் ஆண்டு 6 லட்சம் முதல் 8 லட்சம் வரை சுற்றுலா பயணிகள் பீஜிங் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக