ஞாயிறு, டிசம்பர் 16, 2012

கோப அரசியல் நடத்தும் மோடி திருந்த வேண்டும்: ராகுல் காந்தி !


கோப அரசியல் நடத்தும் மோடி திருந்த வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கூறியுள்ளார். குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் ராகுல் காந்தி சூராவளி பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த பிரச்சாரத்தில் சிறப்புரை ஆற்றிய ராகுல்,  "நரேந்திர மோடி கோப அரசியல் நடத்துகிறார். இதிலிருந்து அவர் மாற வேண்டும். எனது பாட்டி சுட்டுக் கொல்லப்பட்டார். தந்தை குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார். இருந்தாலும் நான் கோபம் கொள்ளவில்லை. கோபத்தை விட்டுக்கொடுத்து விட்டேன். ஆனால் மோடி திருந்தவில்லை அவர் அன்பு அரசியலுக்கு அவர் மாற
வேண்டும்" என்று ராகுல் பேசியுள்ளார்.
குஜராத்தில் கடந்த 13ம் தேதி நடந்த முதல் கட்ட தேர்தலில் 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 2-ம் கட்ட தேர்தல் வரும் 17-ந்தேதி 95 தொகுதிகளில் நடைபெற உள்ளது குறிப்பிடத் தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக