நேட்டோ ஆக்கிரமிப்பு படையில் பெட்ரோல் டேங்க் வாகனம் ஒன்று நேற்று தலிபான் போராளிகள் ாக்கப்பட்டு, தீ வைக்கப்பட்டது. இந்தநிலையில் கொழுந்துவிட்டு எரிந்த வாகனத்தில் இருந்த பெட்ரோலை எடுப்பதற்காக உள்ளூர் மக்கள் பெரும் ஆர்வம் காட்டியதால், மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ ஆக்கிரமிப்பு படை வாகனங்களின் தேவைகளுக்காக பெட்ரோல் டேங்கர் லாரி ஒன்று ஆப்கானிஸ்தான் எல்லையில் வந்து கொண்டிருந்தபோது, தலிபான் போராளிகள் அதிரடி தாக்குதல் நடத்தி, அந்த டேங்கர் லாரியை தீவைத்து எரித்தனர். தீ பயங்கரமாக எரிந்து கொண்டிருந்தபோது, நிலைமையின் விபரீதத்தை உணராத உள்ளூர் பொதுமக்கள், அந்த லாரியில் உள்ள பெட்ரோலை கைப்பற்றுவதற்காக பிளாஸ்டிக் கேனுடன் முண்டியடித்த காட்சியை பத்திரிகையாளர் ஒருவர் படமெடுத்துள்ளார். தங்கள் உயிரைவிட பெட்ரோலை பெரிதாக நினைக்கும் ஆப்கன் மக்களை, போலீஸார் எச்சரிக்கை செய்தும், பலனில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக