ஞாயிறு, டிசம்பர் 16, 2012

இறைத்தூதர் "யூசுப்" நபியின் அடஸ்தலத்தில் "யூதர்கள்" அட்டூழியம் !

ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் "நாப்லஸ்" (Nablus) நகரத்தில் அமைந்துள்ள இறைத்தூதர் "யூசுப்" அவர்களின் அடக்கஸ்தலம், அவமதிக்கப்படுவதாக கிடைத்த செய்தியையடுத்து பாலஸ்தீன இளைஞர்கள் கொதிப்படைந்தனர். (13/12) அதிகாலை 5 மணியளவில், இஸ்ரேலிய ராணுவ ஆதரவுடன் யூதர்கள் சிலர், இறைத்தூதர் யூசுப் அவர்களின் அடக்கஸ்தலத்தின் மீது ஏறிக்கொண்டு, அங்கிருந்த குர்-ஆன் பிரதிகளை கிழித்தும் எரித்தும் அவமதிப்பதாக வந்த
செய்தியால் பதட்டமடைந்த பாலஸ்தீன இளைஞர்கள், நாப்லஸ் நகரத்தை நோக்கி படையெடுத்தனர். இஸ்ரேலிய ராணுவம், அவர்களை தடுத்து நிறுத்தி கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், சாலைகளை மூடியும் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தபோதும், கலவரத்தை கட்டுபடுத்த முடியவில்லை.
ஆரம்பக்கட்ட தகவலின்படி, உயிர் சேதம் எதுவுமில்லை என தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக