புடாபெஸ்ட்:இஸ்ரேல் கொடியை எரித்த சம்பவம் தொடர்பாக ஹங்கேரி நாட்டு பாராளுமன்ற எம்.பி கைது செய்யப்பட்டுள்ளார். சுயேட்சை எம்.பியான பலாஸ் லென்ஹாண்ட் என்பவர் தாம் கைது செய்யப்பட்ட எம்.பி ஆவார். வெள்ளிக்கிழமை தலைநகரமான புடாபெஸ்டில் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் முன்னால் நடந்த இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டத்தின் போது பலாஸ், இஸ்ரேல் கொடியை எரித்தார். ஃபலஸ்தீன் மக்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தும் அட்டூழியங்களை கண்டித்து நடந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். தீவிர தேசியவாத கட்சியான ஜோப்பிக் பார்டியின்
உறுப்பினர்தாம் பலாஸ். பலாஸிடம் விசாரணை நடத்திய பிறகு அவர் விடுதலை செய்யப்பட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக