அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளின் இரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்ச். ஆஸ்திரேலியா வை சேர்ந்த அசாஞ்ச் மீது சுவீடன் நாட்டில் பாலியல் குற்றச்சாட்டு உள்ளதால், தற்போது பிரிட்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். இந்நிலையில் வருகிற 2013ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெறும் தேர்தலில் செனட் உறுப்பினர்
பதவிக்கு போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
பதவிக்கு போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
அதாவது, விக்கிலீக்ஸ் என்ற பெயரில் கட்சியை உருவாக்கி, போட்டியிட திட்டமிட்டுள்ளார்.
மேலும் தனது விக்கிலீக்ஸ் இணையத்தை விரும்பும் 1.7 மில்லியன் உறுப்பினர்களும், 2.1 மில்லியன் பேஸ்புக் ஆதரவாளர்களும், ஆஸ்திரேலியாவில் தனக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்ய முன்வருவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நியூ சவுத் வேல்ஸ் அல்லது விக்டோரியா மாகாணத்தில் ஜுலியன் அசாஞ்ச் போட்டியிடக்கூடும் என ஆஸ்திரேலியா ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக