2005-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வக்கீல் விஸ்வநாத் சதுர்வேதி என்பவர் தொடர்ந்த பொது நல வழக்கில் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ், அவரது மகனும், உத்தரபிரதேச முதல்-மந்திரியுமான அகிலேஷ் யாதவ், மற்றொரு மகனான பிரதீக் யாதவ், மருமகள் டிம்பிள் யாதவ் ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து முலாயம் சிங் யாதவ் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த அப்பீல் மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அல்தாமஸ்கபீர், எச்.எல் தத்து ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. முலாயம்சிங் யாதவ், அவரது மகன்கள் அகிலேஷ் யாதவ், பிரதீக் யாதவ் ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் சி.பி.ஐ. விசாரணையை தொடரலாம் என்றும், விசாரணைக்கு தடை இல்லை என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதே சமயம் அகிலேஷ் யாதவின் மனைவியான டிம்பிள் மீது விசாரணை தேவையில்லை என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும் சி.பி.ஐ. சுதந்திரமான விசாரணை அமைப்பு என்றும், இதுவரை நடந்த விசாரணை அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில்தான் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தர விட்டது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு முலாயம்சிங் யாதவுக்கு மிகப்பெரிய பின்னடைவு என்று கூறப் படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக