பொன்னேரியை அடுத்த பழவேற்காடு சின்ன தெருவை சேர்ந்தவர் கமாலுதீன் (வயது 70). முன்பு மளிகை கடை நடத்தி வந்தார். தற்போது கடையை விற்று விட்டு வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். இவரது மனைவி ரகமதுநாச்சியா (65). இருவரும் ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இன்று காலை வெகு நேரமாகியும் கமாலுதீன் வீட்டு கதவு திறக்கப்படவில்லை. இதனால் அருகில்
வசித்து வந்த தம்பி மரைக்காயர், அவரது மனைவி நலிபா இருவரும் கமாலுதீன் வீட்டுக்கு சென்று பார்த்தனர்.
வசித்து வந்த தம்பி மரைக்காயர், அவரது மனைவி நலிபா இருவரும் கமாலுதீன் வீட்டுக்கு சென்று பார்த்தனர்.
அப்போது கதவு சாத்தி வைக்கப்பட்டிருந்தது. கதவை தள்ளிக் கொண்டு உள்ளே சென்றபோது அங்கு கண்ட காட்சி இருவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. வீட்டுக்குள் கமாலுதீனும், அவரது மனைவி ரகமது நாச்சியாவும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.
2 பேரின் கழுத்தும் அறுக்கப்பட்டிருந்தது. அவர்கள் அணிந்திருந்த நகைகள் மற்றும் வீட்டில் இருந்த பணம் ஆகியவை கொள்ளை போய் இருந்தது. இதுபற்றி திருப்பாலை வனம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்துக்கு பொன்னேரி டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன், இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், திருப்பாலைவனம் சப்- இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
கமாலுதீன், ரகமது நாச்சியா இருவரும் வீட்டுத்தரையில் பிணமாக கிடந்தனர். அவர்கள் அணிந்திருந்த 20 பவுன் நகைகள், மணிபர்சில் இருந்த பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பீரோ திறக்கப்படவில்லை. இன்று அதிகாலை 5 மணியளவில் கொலை சம்பவம் நடத்திருக்கலாம் என்று தெரிகிறது. கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து கொலையாளிகளின் ரேகைகளை பதிவு செய்தனர்.
போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடித்தது. வயதான தம்பதிகளான கமாலுதீன், ரகமது நாச்சியா இருவரும் தனியாக வசிப்பதை தெரிந்து கொண்டு மர்மஆசாமிகள் திட்டமிட்டு இந்த கொலை- கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். கமாலுதீனின் வீட்டு கதவு உடைக்கப்படவில்லை. எனவே நன்கு அறிமுகமானவர்கள் நகை- பணத்துக்கு ஆசைப்பட்டு கொலை செய்தார்களா என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரிக்கிறார்கள்.
கொலையுண்ட தம்பதிக்கு 4 மகள்களும், 1 மகனும் உள்ளனர். மகன் ராஜாமுகமது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர் அவ்வப்போது பணம் அனுப்பி வைப்பார். கமாலுதீனின் மகள்கள் பானு, சபியாபேகம், பப்பி, ஷகிலா. 4 பேருக்கும் திருமணமாகி விட்டது. ஷகிலா, பானு ஆகியோர் அதே பகுதியில் வசித்து வந்தனர். பெற்றோர் கொலை செய்யப்பட்டது குறித்து வெளிநாட்டில் வசிக்கும் மகன் ராஜாமுகமதுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக