பெல்காம்: தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட முடியாது என்று கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் அறிவித்திருக்கிறார். பெல்காமில் கர்நாடகா அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் கூட்டியிருந்தார்.
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர்கள் கலந்து கொண்டனர். அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெகதீஷ் ஷெட்டர், கர்நாடகாவில் நிலவும்
தண்ணீர் பற்றாக்குறையால் தமிழகத்துக்கு நீரைத் திறந்துவிட முடியாது என்றார். மேலும் கர்நாடகா மாநில எம்.பிக்களுடன் நாளை இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்கை நேரில் சந்தித்துப் பேச முடிவு செய்திருப்பதாகவும் ஜெகதீஷ் ஷெட்டர் கூறியுள்ளார்.இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர்கள் கலந்து கொண்டனர். அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெகதீஷ் ஷெட்டர், கர்நாடகாவில் நிலவும்
மேலும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்றாமல் நீதிமன்ற அவமதிப்புக்குள்ளானாலும் கர்நாடகா ஒருபோதும் தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடக் கூடாது என்று காங்கிரஸ் கட்சியும் வலியுறுத்தியுள்ளது.
இதனால் உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட ஆகக் குறைந்தபட்ச காவிரி நீரும்கூட தமிழகத்துக்கு திறந்துவிடப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே தெரிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக