வாஷிங்டன்:நரேந்திர மோடி பிரதமரானால் குஜராத் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்காது என்று இனப்படுகொலையின் கொடூரமாக கொலைச் செய்யப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்.பி இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஸாகியா ஜாஃப்ரி கூறியுள்ளார். வாஷிங்டனில் உள்ள கேபிடல் ஹில்லில் அவர் தெரிவித்தார். மோடி பிரதமராக வெற்றிப் பெற்றால் நான் உள்ளிட்ட
குஜராத் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கை இழந்துவிடும். அது ஒரு போது நடந்துவிடக்கூடாது என்று நான் நம்புவதோடு பிரார்த்தனையும் புரிகிறேன்.’ என்று ஸாகியா கூறினார்.
குஜராத் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கை இழந்துவிடும். அது ஒரு போது நடந்துவிடக்கூடாது என்று நான் நம்புவதோடு பிரார்த்தனையும் புரிகிறேன்.’ என்று ஸாகியா கூறினார்.
மோடிக்கு விசா தடையை தொடர ஸாகியா ஒபாமா அரசுக்கு கோரிக்கை விடுத்தார். மோடிக்கு விசா தடையை தொடருவதை உறுதிச் செய்ய முயற்சி மேற்கொண்ட அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு ஸாகியா நன்றி தெரிவித்தார். இந்தியாவின் நீதி கட்டமைப்பு வேகம் குறைந்தது. எனினும் வலுவானது. மோடி அதிகாரத்திற்கு வந்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி மறுக்கப்பட்டுவிடும் என்று ஸாகியா மேலும் கூறினார்.
மகள் நிஷ்ரின் ஹுஸைனும் ஸாகியாவுடன் கலந்துகொண்டார். ஸாகியா மற்றும் அவரது மகளின் முன்னிலையில் மருமகன் நஜீத் ஹுஸைன் ஸாகியாவின் அறிக்கையை வாசித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக