புதன், டிசம்பர் 12, 2012

மனித உரிமை மீறல்களில் உத்திரபிரதேசத்திற்கு முதலிடம் !

மனித உரிமை மீறல்களில் உத்தரபிரதேச மாநிலம் முதலிடம் வகிப்பதாக உள்துறை அமைச்சர் ஆர்.பி.என்.சிங் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று அவர் கூறியதாவது:-

கடந்த ஆண்டில் நாட்டிலேயே அதிகமான மனித உரிமை மீறல்கள் உத்தரபிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளன. உத்தர பிரதேசத்தில் 30,788, ஹரியானாவில் 6,002, டெல்லியில் 5,558, ஒடிசாவில் 3,986, பீகாரில் 2,984 என நாடு முழுவதும் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மனித உரிமை கமிஷனில் 68,259 வழக்குகள் பதிவாகியுள்ளன. 

போலீஸ் அத்துமீறல்களிலும் உத்தரபிரதேசம் முதலிடம் வகிக்கின்றது. கடந்த ஆண்டு நாட்டில் நிகழ்ந்த 22,908 போலீஸ் அத்துமீறல்களில் உத்தரபிரதேசத்திதல் 13,656, டெல்லியில் 1,798, ஹரியானாவில் 1,554, பீகாரில் 801, ராஜஸ்தானில் 762, வழக்குகள் பதிவாகியுள்ளன. 

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக