திருவனந்தபுரம்: தமிழகத்தின் கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து கேரளா மாநிலத்துக்கு 266 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என்று அம்மாநில சட்டசபையில் மின் துறை அமைச்சர் ஆர்யதன் முகமது தெரிவித்துள்ளார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மொத்தம் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. முதல் அணு உலை மூலம் 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இதில் 133 மெகாவாட் மின்சாரமும் அடுத்த அணு உலை இயங்கும்போது இரு மடங்காக 266 மெகாவாட் மின்சாரமும் கேரளாவுக்கு வழங்கப்படும். இது 2007-ம் ஆண்டு மத்திய மின்துறை அமைச்சகத்தால் கொடுக்கப்பட்ட உறுதிமொழி.
இதற்காக கூடங்குளத்திலிருந்து திரிசூர் அருகே மதக்கதாரா வரை 400 கிலோ வாட் மின்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார் மின் துறை அமைச்சர் ஆர்யதன் முகமது. கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதும் தமிழகத்துக்கே கொடுக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி வரும் நிலையில் கேரளா இப்பொழுது புது அறிவிப்பை வெளியிட்டிருப்பது கூடுதல் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக